என் ஆசீர்வாதம் – என் தாய்

அளவில்லா தாயின் அன்பு, தமிழ் அளவீடுகளில் :
பாசம் – ஒவ்வொரு ‘மிய்’யும்
கடவுளை கண்ட நாள் – உன் கருவறையில் நான் சென்ற ‘கைநொடி’யில்
இறை வரம் – உனக்கு மகளாய் பிறந்த ‘வினாடி’
அரவணைப்பு – உன் கைகோர்த்து நடக்கும் ஒவ்வொரு ‘அணு’வும்
என் முன்னேற்றம் – உன் ஓய்வில்லா உழைப்பில் – ஒவ்வொரு ‘கணம்’மும்
ஆறுதல் – உன் மடி சாயும் ஒவ்வொரு ‘நிமிடம்’மும்
நன்னாள் – உன்னோடிருக்கும் எல்லா ‘நாள்'(ட்)களும்
பாதுகாப்பு – உன்னோடு இருக்கும் அனைத்து ‘பருவம்’ங்களும்
இரக்கம் – உன் கருணை உயிர்களிடத்து எல்லா ‘வருடங்கள்’ளும்
நித்திய ஆசை – நீயே என் தாயாக வேண்டும் – அனைத்து ‘சகாப்தங்கள்’ளிலும்!


By- S. Pricella Deva Kumari – X B

Submit Application